செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் 7 முஸ்லிம் வீடுகளில் அதிரடி சோதனை!!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 – ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் முஸ்லிம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 11 பேர் இந்தியர்கள்.  500 – க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பெண் உள்பட 9 பயங்கரவாதிகள், தங்களது உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு இந்த தற்தொலைத் தாக்குதலை நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. எனினும், இலங்கையில் உள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புதான் இந்த நாச வேலையை செயல்படுத்தியது.  இந்த தாக்குதல் தொடர்பாக தமிழ் ஆசிரியர், பள்ளி முதல்வர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தேசிய தவ்ஜீத் முஸ்லிம் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஜஹ்ரான் ஹாசிமின், பலமுறை தமிழகம் வந்து கோவை மற்றும் சென்னை மண்ணடியில் உள்ள சில முஸ்லிம்களை சந்தித்துள்ளார். இதுதொடர்பான பென் டிரைவ்கள், சிடிகள் உள்பட பல ஆதாரங்கள், இந்திய புலனாய்வு துறையிடம் சிக்கியது. அதில் இலங்கையில் குண்டு வெடிப்பு தொடர்பான சதி திட்டங்கள் இடம்பெற்று இருந்தன.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கையில் எந்தெந்த இடங்களில் குண்டு வெடிப்பு நடக்க உள்ளது போன்ற தகவல்களை இலங்கைக்கு இந்தியா வழங்கி இருந்தது. எனினும் இலங்கை அதிகாரிகள் மெத்தனமாக நடந்துகொண்டதால், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அதில் தொடர்புடைய பல நபர்கள் தமிழகத்தில் உள்ளனர் என்பதை தேசிய புலனாய்வு அமைப்பினர் உறுதி செய்தனர். இதன் அடிப்படையில் கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உக்கடத்தில் அசாருதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோரது வீடுகளில் சோதனை நடப்பட்டு வருகிறது.  இதேபோன்று குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் உள்பட 7 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த சோதனையில் பென் டிரைவ் உள்பட பல ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. சோதனை தொடரந்து நடக்கிறது. சோதனையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close