செய்திகள்

கதுவா சிறுமி கொலை வழக்கில் பாஜகவினர் தலையிட்டனர் என கூறுவது அப்பட்டமான பொய் ! விசாரணை அதிகாரி திட்டவட்டம் !!

கதுவா சிறுமி பலாத்கார கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளில் பாஜகவினர் அழுத்தம் தந்ததாக கூறப்பட்டதில் உணமையில்லை.  சுதந்திரமாக  விசாரணை  நடைபெற்றதாக தலைமை விசாரணை அதிகாரி ஆர்.கே.ஜல்லா கூறினார்.    

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பதான்கோட் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. முக்கிய குற்றவாளி சாஞ்சி ராம் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தடையங்களை அழித்த போலீஸார்  3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக தலைமை விசாரணை அதிகாரி ஆர்.கே.ஜல்லா பிடிஐ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த வழக்கில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்களுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நான் வழக்கை விசாரிக்கும்போது, பாஜக தலைவர்களிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பும் வரவில்லை. அரசியல் தலைவர்களிடம் இருந்து எனக்கோ, என் குழுவினருக்கோ எவ்வித அழுத்தமும் தரப்படவில்லை.

இந்த வழக்கு அனைவரது கூட்டு முயற்சியால்தான் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கில் வருத்தத்துக்குரிய விஷயம் ஒன்றுதான். சாஞ்சி ராமின் மகனுக்கு எதிராக சரியான ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டும் தான் வேதனையளிக்கிறது. விஷால் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்றார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close