இந்தியா

2024 க்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்று மத்திய அரசு இலக்கு


வரும் 2024க்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

மத்திய நீர்வளத்துறை அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்’ என பா.ஜ. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை விரைவு படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 14 லட்சம் குடும்பத்தினருக்கு இன்னும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தான் இந்த பிரச்னை உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த குறை போக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Reproduced article on public interest

Courtesy: Dinamalar

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close