இந்தியா

இப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள்? தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க, தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வரும் 26-ம் தேதி சந்தித்து ஆட்சி அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உரிமை கோரவுள்ளார்.

பா.ஜ.க கூட்டணி மொத்தம் 353 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, HTN டிரங்கா தொலைக்காட்சிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேட்டி அளித்தார். இரண்டாம் முறை பெருவெற்றி பெற்ற பா.ஜ.க , நாட்டிற்கு தங்களின் மூலமாய் அடுத்து செய்யப்போவது என்ன? என்று தொகுப்பாளர் கேட்க, நிதின் கட்காரி சொன்னது என்ன தெரியுமா?

“எங்களது முதலாவது ஆட்சி காலத்தில், தேசம் முழுதும் நெடுஞ்சாலைகளை இணைத்து இந்திய தேசம் அனைவருக்கும் ஒன்று காட்டினோம். அடுத்து இனி வரும் 5 ஆண்டு காலத்தில், எப்படியேனும், நதிகளை தேசியமயமாக்கி, கங்கா- கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைத்தால், காவிரியும் இணையும். இதனால், தேசம் மட்டுமின்றி, குறிப்பாக தமிழ்நாட்டின் நெடு நாளைய நீர் பிரச்சனை தீர்ந்து, விவசாயமும், நீர் வளமும் செழித்து, தமிழர்கள் நிரந்தர பயன் பெறுவார்கள்” என்றார்.

இதே விஷயத்தை இந்தியா டுடே டிவிக்கு தேர்தல் முடிவுக்கு பிறகு பேசிய கட்காரி, ராகுல் கன்வாலிடன் தெரிவித்தார்.

தி.மு.க கூட்டணி கட்சிகளின் விஷம பிரச்சாரத்தால் தமிழகமே பா.ஜ.க-விற்கு எதிராக வாக்களித்த போதிலும், தமிழகத்துக்காகவும், தமிழ் மக்களின் நலனுக்காகவும்  இதனை செய்து காட்டுவேன் என்று கூறியது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இத்தனைக்கும் தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிட்ட அத்தனை தொகுதியிலும் எதிர்மறை முடிவுகளே வந்த நிலையிலும், தமிழகத்துக்கு நதிநீர் இணைப்பு திட்டத்தை கொண்டு வருவேன் என்று கனநேரத்தில் அவர் கூறிய பதில் தான் பலரையும் கண்கலங்க செய்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் இதை படித்து தான் கண்கலங்கியதாக ட்வீட் போட்டுள்ளார்.

நிதின் கட்காரியின் இந்த அறிவிப்பிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close